வாவ்!! 19 வயதில் அக்காவான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா!! அவரது குட்டி தங்கையின் அழகிய புகைப்படம் இதோ..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேகாவின்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேகாவின் குட்டி சகோதரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை நேகா. வாணி ராணி தொடரை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
மேலும் சன் டிவியில் சித்தி 2 தொடரிலும் நடித்துவந்தார். இப்படி தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவரும் நேகாவுக்கு தற்போது 19 வயது ஆகிறது. இந்நிலையில் நேகாவின் பெற்றோருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் அக்காவான சந்தோஷத்தை நேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தனது குட்டி சகோதரியின் அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நேகா. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.