பேட்ட படம் எப்படி? பாபி சிம்ஹா வெளியிட்டுள்ள வீடியோ
Babi simha about petta video
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் வரும் ஜனவர் 10 ஆம் தேதி வெளியாகிறது. ரஜினியின் இளமைத் தோற்றத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்திற்கான புரோமசன் வேலைகள் மிகவும் பிராமண்டமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் துவங்கிய நிலையில் ரசிகர்கள் முண்டி அடித்து கொண்டு டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பற்றியும், பேட்ட படத்தில் ரஜினியின் நடிப்பைப் பற்றியும் நடிகர் பாபி சிம்ஹா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.