இரண்டாம் முறையாக அப்பாவான நடிகர் பாபி சிம்ஹா! என்ன குழந்தை தெரியுமா?
babi simha boy baby
தமிழ் சினிமாவில் சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பாபி சிம்ஹா. அதன் பிறகு சூது கவ்வும் திரைப்படம் மூலம் பிரபலமானார்.விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிட்ஸா படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் ஜிகர்தண்டா படம் ரசிகர்களிடையே பிரபலமானது. அதுமட்டுமின்றி அந்த படம் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்நிலையில் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கிருமி,உறுமீன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே முத்ரா என்ற அழகான பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமான ரேஷ்மிக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.