தெய்வ திருமகள் சாராவுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா? வெளியான தகவலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
Baby sara act in ponniyin selvan movie
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தெய்வத்திருமகள். இந்த படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. அதனைத் தொடர்ந்து அவர் சைவம் விழித்திரு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சாரா, தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாரா தற்போது மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க இயக்குனர் மணிரத்னம் பல வருடங்களாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால், விக்ரம் பிரபு, சரத்குமார் , பிரபு, ரகுமான் உள்ளிட்ட மாபெரும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.