கங்குவா படத்தில் அதிக சம்பளம் கேட்டு வாய்ப்பை இழந்த பாகுபலி பட நடிகர்..
கங்குவா படத்தில் அதிக சம்பளம் கேட்டு வாய்ப்பை இழந்த பாகுபலி பட நடிகர்..
ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். ஆனால் முதலில் இப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவை தான் அணுகினார்களாம். இவர் ஏற்கனவே பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் படத்தின் கதையை கேட்டுவிட்டு, பின்னர் சம்பளத்தைப் பற்றி பேசும்போது, தனக்கு 18கோடி சம்பளம் வேண்டும் என்று ராணா கேட்டாராம். இதையடுத்து தான் பாபி தியோலை இந்தப் படத்தில் நடிக்க வைக்க அணுகியிருக்கின்றனர். அவர் ராணாவை விட குறைவாக கேட்டதால் அவரையே நடிக்க வைத்தார்களாம்.
இந்த தகவலை சினிமா யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சூர்யா ஓய்வு எடுத்துவரும் நிலையில், தற்போது பாபி தியோல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.