அடக்கொடுமையே! இவங்களுக்குமா..கடும் சோகத்துடன் நடிகர் சாந்தனு வெளியிட்ட முக்கிய தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ். இவர்கள் இருவரும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனோ தீவிரமெடுத்து வரும் நிலையில் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது பெற்றோர்கள் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு , மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மேலும் வீட்டில் உள்ளவர்களும், வேலை செய்பவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே கடந்த பத்து நாட்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் தனது பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.