நாங்கள் பிரிய தாடி பாலாஜியின் முதல் மனைவி தான் காரணம்! ஓப்பனாக கூறிய நித்யா!
Balaji niththiya
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. அதனைத்தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அதன் பிறகு இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பிரச்சனை விவாகரத்து வரை சென்றது. இந்நிலையில் இருவருக்கும் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட இருவரும் தங்களது பிரச்சினையை மறந்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் நித்யா தங்களது பிரிவு குறித்து கூறியுள்ளார். இவர்கள் பிரிய முக்கிய காரணம் தாடி பாலாஜியின் முதல் மனைவி எனக் கூறியுள்ளார். அதாவது தாடி பாலாஜியின் முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளான். அவனது பிறந்த நாளுக்கு தாடி பாலாஜி ஒரு சைக்கிள் வாங்கித் தர இருப்பதாக தன்னிடம் கூறினார். அதிலிருந்துதான் தங்களது பிரச்சனை ஆரம்பித்தது என கூறியுள்ளார்.