இந்த மனசு யாருக்கு வரும்.. குக் வித் கோமாளி பாலா, புகழுடன் ஸ்ருதிகா செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!
இந்த மனசு யாருக்கு வரும்.. குக் வித் கோமாளி பாலா, புகழுடன் ஸ்ருதிகா செய்த நெகிழ்ச்சி காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதையே ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்குமாறு மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான இதன் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
நேற்று மிகவும் பிரமாண்டமாக நடந்த க்ராண்ட் பைனலில் ஸ்ருத்திகா வெற்றி பெற்று டைட்டில் வின்னரானார். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ப்ரீத்தி 1 லட்சம் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஸ்ருத்திகாவுக்கு கோமாளியாக இருந்த புகழுக்கு ஒரு லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கோமாளியான பாலாவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புகழ் தனக்கு கிடைத்த பணத்தை தான் எப்போதாவது ஒருநாள்தான் வருகிறேன் என கூறி பாலாவிடம் கொடுத்தார்.
இந்நிலையில் அதனை பாலா தனக்கு கிடைத்த பணத்துடன் சேர்த்து பெரம்பலூரில் இருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்புக்கு வழங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ஸ்ருதிகா தனக்கு கிடைத்த பரிசு பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை அதே ஆசிரமத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் புகழ், பாலா மற்றும் ஸ்ருதிகா செய்த காரியம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது