என்னது.. பாவனா இனி விஜய் டிவியில் தொகுத்து வழங்கமாட்டாரா! ஆனால் அந்த சேனலில்.. தீயாய் பரவும் ஷாக் தகவல்!!
என்னது.. பாவனா இனி விஜய் டிவியில் தொகுத்து வழங்கமாட்டாரா! ஆனால் .. தீயாய் பரவும் ஷாக் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக இருந்தவர் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பாவனா தனது தனித்துவமான குரலாலும், உச்சரிப்பு மிகுந்த பேச்சாலும் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் அவர் சில காலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பாவனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை எனவும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் Dance Vs Dance 2 நிகழ்ச்சியை தொகுத்து வழகங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.