"உங்க தேவைக்கு மட்டும் நாங்க வேணுமா" மேடையில் ஹன்சிகாவை அசிங்கப்படுத்திய பயில்வான்..
உங்க தேவைக்கு மட்டும் நாங்க வேணுமா மேடையில் ஹன்சிகாவை அசிங்கப்படுத்திய பயில்வான்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி பெற்று ஹன்சிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இதனையடுத்து ஹன்சிகா பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது ஹன்சிகா நடிகர் ஆதியுடன் சேர்ந்து 'பார்ட்னர்' திரைப்படத்தில் நடித்து இப்படத்தின் பிரமோஷனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் ஹன்சிகாவை கொச்சையாக பேசிய வீடியோ வைரலாக பரவி ரோபோ சங்கரை ரசிகர்கள் திட்டி வந்தனர்.
இதனை அடுத்து தற்போது பயில்வான் ரங்கநாதன் ஹன்சிகாவை குறித்து மேடையில் கேள்வி கேட்டார். அவர் பேசியதாவது, "உங்கள் திருமணத்தின் போது பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் உங்கள் படத்திற்கு பிரமோஷனிற்காக மட்டும் நாங்கள் வேண்டுமா? உங்கள் தேவைக்கு மட்டும் எங்களை அழைப்பீர்களா" என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.