"ராய் லட்சுமி என்றாலே கவர்ச்சி வெடிகுண்டு தான்" பயில்வான் ரங்கநாதன் பேட்டி.!
ராய் லட்சுமி என்றாலே கவர்ச்சி வெடிகுண்டு தான் பயில்வான் ரங்கநாதன் பேட்டி.!
கர்நாடகாவைப் பூர்வீகமாக கொண்ட ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 2005ம் ஆண்டு "கற்க கசடற" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ராய் லட்சுமி.
தொடர்ந்து தமிழில் குண்டக்க மண்டக்க, நெஞ்சைத் தொடு, ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், வாமனன், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை, சௌகார்பேட்டை, நீயா 2, மேதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும், மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராய் லட்சுமி குறித்துப் பேசியுள்ளார்.
அதில், " ராய் லட்சுமி என்றாலே கவர்ச்சி வெடிகுண்டு தான். முதல் படத்திலேயே தைரியமாக, மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். திருமணத்தில் எல்லாம் அவருக்கு விருப்பமில்லை" என்று பயில்வான் கூறியுள்ளார்.