"கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்" நடிகையை தொல்லை செய்த பிரபலம்.?
கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் நடிகையை தொல்லை செய்த பிரபலம்.?
நடிகர் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான படம் தான் 'கடைக்குட்டி சிங்கம்'. இந்தப் படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்தவர் தான் ஜீவிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' தொடரில் நடித்ததன் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அடுத்ததாக இவர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த 'ஆண் தேவதை' படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் கடைக்குட்டி சிங்கம் பட வாய்ப்பு வந்ததாக கூறினார். முதலில் ஜெயா டிவியில் மனதில் உறுதி வேண்டும் சீரியலில் தான் நடித்துள்ளார்.
தொடர்ந்து வைராக்கியம், ஆபீஸ், பார்த்த நியாபகம் இல்லையோ, தேவதை என பத்துக்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார் ஜீவிதா. இவர் எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். மிகுந்த தைரியசாலியானவர்.
முதலில் ஒரு படத்தின் காட்சியில் நடிக்க கேட்டபோது 40000 சம்பளம் பேசினார்களாம். பிறகு அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்டால் தான் 40000 தருவோம். இல்லையென்றால் 10000 தான் தருவோம் என்று கூறினார்கள். என்னால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது என்று கூறி அந்த படத்தில் நடித்துள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.