மீண்டும் ரேகா நாயரை வம்பிழுக்கும் பயில்வான்.. என்ன காரணம் தெரியுமா.?
மீண்டும் ரேகா நாயரை வம்பிழுக்கும் பயில்வான்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகைகளை கொச்சையாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பல சர்ச்சைகள் பின் தொடர்ந்தாலும் இவர் சமூகவலைத்தளங்களில் பேசுவதை நிறுத்தவில்லை.
இதனையடுத்து 'இரவில் நிழல்' பட நடிகை ரேகா நாயர் இப்படத்தில் ஆடையின்றி நடித்திருப்பார். இதனை விமர்சித்து பயில்வான் வீடியோ வெளியிட்டார். இதற்கு ரேகா நாயர் நடுரோட்டில் வைத்து பயில்வனை திட்டி சண்டையிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் ரேகா நாயரும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார். மேலும் சமீபத்தில் ஒரு வீடியோவில் ஒரு சில ஆடைகள் அணிந்தால் ஆண்கள் தொடத்தான் செய்வார்கள். அதை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்தார்.
இதன்பின் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பெண் ஒருவர் ரேகா நாயரின் பெண்களை குறித்த பேச்சிற்காக இவரை கிழித்து தொங்க விட்டார். இதனையடுத்து தற்போது பயில்வான் இதைக் குறித்து அந்த பொம்பள ஒரு விவஸ்தகெட்ட பொம்பள என்று மீண்டும் வம்பிழுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.