"நீ தமிழ்நாட்டுக்கு வந்து பாரு! ரஜினி யாருனு தெரியும்" சீறும் பயில்வான் ரங்கநாதன்.!
நீ தமிழ்நாட்டுக்கு வந்து பாரு! ரஜினி யாருனு தெரியும் சீறும் பயில்வான் ரங்கநாதன்.!
கர்நாடகாவைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து அவ்வப்போது அங்கு போராட்டங்கள் நடத்தி வருகிறார். மிகப்பெரிய கன்னட வெறியராக அறியப்படுபவர் வாட்டாள் நாகராஜ்.
இந்நிலையில் தற்போது காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் தமிழ்ப் படங்களை ஓட விடமாட்டோம் என்றும், தமிழர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துக்கொள்ளுங்கள் என்றும் பேசியிருந்தார். மேலும் அங்கிருக்கும் தமிழர்கள் காவிரி நீரைக் குடிக்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் இவர், ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், " வாட்டாள் நாகராஜ் என்ற கன்னட வெறியர், தன் மாநிலத்தில் பிறந்த ரஜினியையே அங்கு நுழையக்கூடாது என்று கூறி வருகிறார்.
ரஜினிக்கு அங்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. அவரது அண்ணன் அங்கு தான் இருக்கிறார். இந்நிலையில் ரஜினியை அங்க வரக்கூடாது என்று சொல்ல இவர் யார்? வாட்டாள் நாகராஜ் தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தால் தான் ரஜினி யாரென்று தெரியும்" என்று சீறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.