கணவரை அலறி ஓட வைத்த நடிகை அம்பிகா.? பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்..
கணவரை அலறி ஓட வைத்த நடிகை அம்பிகா.? பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்..
1976ம் ஆண்டு "சோட்டாணிக்கரை அம்மா" என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்பிகா. தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்பிகா, 1978ம் ஆண்டு "சமயமில்லை போலும்" என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1981ம் ஆண்டு தமிழில் வெளியான "அந்த ஏழு நாட்கள்" படத்தில் அம்பிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அந்தக்கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ள அம்பிகா, மொத்தம் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு பேட்டியில் அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
அதில் அவர், "1988ம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். மீண்டும் 2000ம் ஆண்டு ரவிகாந்த் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய அம்பிகா, பிறகு அவருடனும் சண்டை போட்டு அலறி ஓடவிட்டார் " என்று கூறியுள்ளார்.