#BeastReview: காதுல பூ சுற்றாமல், உடல் முழுவதும் பூ சுற்றிய நெல்சன்.. படம் எப்படி? - பயில்வான் ரங்கநாதன்.!
#BeastReview: காதுல பூ சுற்றாமல், உடல் முழுவதும் பூ சுற்றிய நெல்சன்.. படம் எப்படி? - பயில்வான் ரங்கநாதன்.!
நடிகர் விஜய் படத்திற்கு செட்டாகவில்லையா அல்லது இயக்குனர் விஜய்யை உபயோகம் செய்துகொள்ளவில்லையா என தெரியவில்லை. படம் பார்க்கும் அளவு மட்டுமே உள்ளது. எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் என பயில்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், செல்வராகவன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தயாரிப்பு பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த படம் இன்று (ஏப்ரல் 13) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் எப்படி உள்ளது என்பது தொடர்பாக செய்தியாளர் மற்றும் திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில், "மிகவும் திறமைசாலியான, இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் போல நடிகர் விஜய் நடித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரின் மனைவி, மகள் உட்பட பலரையும் மாலில் வைத்து பயங்கரவாதிகள் கடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசு இருப்பதால், மத்திய உள்துறை என படம் எடுத்ததாக தெரியவருகிறது.
பல்வேறு இடியாப்ப சிக்கலுக்கு விடை தருவது படத்தின் கிளைமேக்சில் உங்களுக்கே தெரியும். பரபரப்பான பல காட்சிகள் இருந்தாலும், அவை மனதில் பதியவில்லை. பல விறுவிறுப்பு காட்சிகள் நாடகம் போல இருக்கிறது. இயக்குனர் நடிகர் விஜயை வைத்து எதோ படம் எடுக்க வேண்டும் என்பதை போல எடுத்ததாக தெரியவருகிறது. நாயகன் - நாயகிக்கு முதல் கடைசி என 2 பாடல்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 2 பாடல் இருந்திருந்தால் நலம்.
படத்தில் வி.டி.வி கணேஷ் இடைவேளை வரை சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் வசனத்தை தெளிவாக உச்சரித்து பேசியது அவர் மட்டுமே. படத்தில் அவர் மட்டும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறார். யோகி பாபுவின் காமெடிகள் நடுத்தரம். பெரிய அளவில் சிரிப்பை ஏற்படுத்தவில்லை. பல வடநாட்டு நடிகர்களும் நடித்துள்ளனர். நடனம் சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளும் பிரம்மாதம். படம் பார்க்கலாம். அனிரூத் இசை மோசம். ஒரே மெட்டை திரும்ப திரும்ப வாசித்துள்ளார். அவரிடம் இருந்து அதிகளவு எதிர்பார்க்கிறோம்" என்று பேசினார்.