#BeastFire: பத்தவச்சிட்டையே பரட்ட... உண்மையில் தீப்பிடித்த திரை.. ரசிகர்கள் சம்பவம்?..!
#BeastFire: பத்தவச்சிட்டையே பரட்ட... உண்மையில் தீப்பிடித்த திரை.. ரசிகர்கள் சம்பவம்?..!
பீஸ்ட் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தபோதே திரை தீப்பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, வி.டி.வி கணேஷ் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் படம் இன்று வெளியாகியுள்ளது.
படம் வெளியாகுவதற்கு முன்னதாகவே பல்வேறு விமர்சனத்தை பெற்ற நிலையில், படம் யோகிபாபுவின் கூர்கா திரைப்படத்தை போல இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. படம் வெளியானதும் சுறா + புலி கலவையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நன்றாக இல்லாத காரணத்தால், திரைச்சீலையை ரசிகர்கள் தீ வைத்து கொளுத்தியதாக வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது? எங்கு? பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. தொழில்நுட்ப கோளாறால் திரை தானாகவே தீப்பிடித்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.