×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாத ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Beautiful Aiswarya rai at cannes film festival

Advertisement

45 வயதான ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் பிரான்ஸின் கேன்ஸ்சில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். 

1994 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 21 வயதான ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். அப்போது அவர் கல்லூரியில் பயின்று வந்தார். 

பின்னர் பாலிவுட், கோலிவுட் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இவரை இயக்குநர் மணிரத்தினம் தனது தமிழ் படமான இருவர் என்ற படத்தில் முதலில் அறிமுகம் செய்தார். 

தொடர்ந்து சிறப்பான நடிப்பால் இரண்டு முறை பில்ம்பேர் விருதும், 2009 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2012 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் பெற்றுள்ளார். பின்னர் 2007 ஆம் ஆண்டில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். 

இவ்வளவு புகழ்மிக்க ஐஸ்வர்யா ராய்க்கு குறிப்பிட்ட திரைபிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ள கூடிய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள பிரான்ஸில் இருந்து அழைப்பு வந்தது. இந்த ஆண்டு இந்த விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சிகப்பு கம்பள வரவேற்பில் ஐஸ்வர்யா ராய் மின்னும் உடையுடன், புதுப்பொழிவுடன், பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் தனது மகளுடன் அந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 



Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aiswarya rai #Abishek bachan #Cannes film festival
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story