காதல் பரத்தின் தவறான முடிவால் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை... ரசிகர்கள் வருத்தம்!?
காதல் பரத்தின் தவறான முடிவால் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை... ரசிகர்கள் வருத்தம்!?
நடிகர் பரத் ஆரம்ப காலங்களில் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சில படங்களில் நடித்தார். தமிழில் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் திரையுலகில் நுழைந்தார்.
ஆரம்பகால சினிமா வாழ்க்கை இவருக்கு வெற்றியைத் தந்தாலும் இவர் தேர்ந்தெடுத்த சில கதைகள் தோல்வியை தழுவியது.
இவர் பாய்ஸ், எம் மகன், காதல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். இவர் நன்றாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடனத்திலும் கலக்குபவர். நடிகர் மாதவனை போலவே சாக்லேட் பாய் தோற்றம் கொண்ட இவர் திடீரென்று ஆக்சன் படங்களில் நடிக்கிறேன் என்று கதைகள் தேர்ந்தெடுப்பதில் சொதப்பியதால் கோலிவுட் திரை உலகை விட்டு காணாமல் போனார்.
கடைசியாக 2022ல் இவர் நடித்த மிரள் என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தற்போது சினிமாவில் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் வெற்றி படங்களை அளித்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
பரத்தை வைத்து வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் மீண்டும் பரத்துடன் இணைந்து படப் பிடிப்பு வரை சென்றார். இந்நிலையில் பரத்தின் ஆசைகளை கெடுக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. பரத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அது பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த படத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்ற பரத்தின் கனவு தற்போது கேள்விக்குறியாகி விட்டது.