ஒத்த வார்த்தையால் உருவான சர்ச்சை! விளக்கமளித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட பதிவு!
bharathiraja explain to directors to saying word nonjan
சென்னையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்பொழுது அவர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை ஒப்பிட்டு வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, 1000 பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த மற்ற தயாரிப்பாளர்கள் பாரதிராஜா அவ்வாறு நோஞ்சான் என கூறியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் நோஞ்சான் என்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக அறிந்தேன்.
திரைத்துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்ற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம் என கூறியுள்ளார்.