காரில் கடத்தப்பட்ட விவகாரம்! வேதனையுடன் நடிகை பாவனா வெளியிட்ட பதிவு!என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
காரில் கடத்தப்பட்ட விவகாரம்! வேதனையுடன் நடிகை பாவனா வெளியிட்ட உருக்கமான பதிவு!என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
2017-ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்குத் திரும்பியபோது பாவனா காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் திலீப், பல்சர் சுனி ஆகியோர்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக
கைது செய்யப்பட்டனர். அதனை தொடந்து 74 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதனையடுத்தும் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இது எளிதான பயணம் அல்ல. 5 வருடங்களாக, என் மீது நடத்தபட்ட தாக்குதலின் பாரத்தில் என் பெயரும், எனது அடையாளமும் நசுக்கப்பட்டுள்ளது. நான் குற்றம் செய்யவில்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடைபெற்றது.
அத்தகைய சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள்.
எனக்காக ஒலிக்கும் பல குரல்களை கேட்கும் போதும், இந்த யுத்தத்தில் நான் தனியாக இல்லை என்பதை உணர்கிறேன். நீதியை நிலைநாட்டவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும், வேறு யாரும் பாதிப்படையாமல் இருக்கவும் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். உடன் நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி என தெரிவித்துள்ளார்.