அட.. தனுஷின் புதிய படத்தில் இந்த பிக்பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?.! அவரே வெளியிட்ட பதிவு..!!
அட.. தனுஷின் புதிய படத்தில் இந்த பிக்பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?.! அவரே வெளியிட்ட பதிவு..!!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் "நானே வருவேன்". இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த வருடம் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், தனுசுக்கு ஜோடியாக மேயாதமான் இந்துஜா நடிக்கிறார். அண்மையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு "நானே வருவேன்" படக்குழு தனுஷின் லுக் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை வெளியிட்ட நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷுடன் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து டப்பிங் முடிந்து இயக்குனர் செல்வராகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆஜித், தற்போது தனது சோசியல் மீடியாவில் "டப்பிங் பணிகள் முடிந்துள்ளது" என்று குறிப்பிட்டு இயக்குனர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.