பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கவுள்ளது தெரியுமா? விரைவில் வரவிருக்கும் ப்ரோமோ வீடியோ.! உற்சாகத்தில் ரசிகர்கள்..
Big boss season 4 coming soon
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிப்பரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மூன்று வருடங்களாக நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதத்தில் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது வரை தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரங்குக்குள் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தொலைக்காட்சிகள் கடந்த சில வாரங்களாக புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை செப்டம்பர் மாதத்திலிருந்து ஒளிப்பரப்பு செய்ய சேனல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் பிக்பாஸ் சீசன் 4 ஆன ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.