மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த பிக்பாஸ் பாலாஜியின் வீட்டில் நேர்ந்த பெரும் சோகம்!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!
பிக்பாஸ் பாலாஜியின் தந்தை முருகராஜ் திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது ரசிகர்கள் பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு மிகவும் சுவாரசியமாக சென்ற நிலையில் ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் நடிகர் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளரானார். மேலும் பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் ஒரு மாடல் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில தினங்களிலேயே தனது கருத்தை வெளிப்படையாக கூறி, அடிக்கடி அனைவரிடமும் சண்டைபோட்டு கோபப்பட்டு பெரும் விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் தனது குணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் பொறுமையாக அனைவரையும் சமாளித்து வந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது தந்தை அடிக்கடி குடித்து விட்டு வந்து அடிப்பார் எனவும், தனக்கு சரியான குடும்பம் அமையவில்லை எனவும் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டே இருப்பார். இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மகிழ்ச்சியுடன் இருந்த பாலாஜியின் தந்தை முருகதாஸ் திடீரென இறந்து விட்டதாக தகவல்கள் பரப்பி வருகிறது. மேலும் இது குறித்து பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.