காதலன் மீது மோசடி புகார்! விசாரணையில் வசமாக சிக்கிய பிக்பாஸ் ஜூலி! அட.. என்னவெல்லாம் நடந்திருக்கு பார்த்தீர்களா!!
காதலன் மீது மோசடி புகார்! விசாரணையில் வசமாக சிக்கிய பிக்பாஸ் ஜூலி! அட.. என்னவெல்லாம் நடந்திருக்கு பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஜூலி. அவர் தற்போது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர்,
அமைந்தகரையைச் சேர்ந்த மனீஷ் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தன்னிடமிருந்து பைக், தங்கச் செயின், வீட்டு உபயோகப் பொருள்கள் என 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் மனீஷிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, ஜூலிக்கு அவரது முன்னாள் காதலருடன் பிரச்சினை எழுந்தபோது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலி அடிக்கடி செல்லும் அழகு நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மனீஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நெருக்கம் காட்டி மனிஷுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், அதனால் மனிஷ், அடிக்கடி ஜூலிக்கு போன் செய்து நீ இல்லாமல் வாழ முடியாது என கூறி அழுததாகவும் அதனை தொடர்ந்து மனிஷை மிரட்டவே ஜூலி காவல் நிலையத்தில் அவ்வாறு புகார் அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மனிஷ் தானாகவே முன்வந்து ஜூலி வாங்கித்தந்த பைக், தங்கச் செயின் போன்ற அனைத்து பொருட்களையும் போலீசார் முன்னிலையில் திருப்பி அளித்துள்ளாராம். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.