ப்பா.. பிக்பாஸ் ஜூலியா இது.! ஏன் திடீர்னு இப்படியொரு சேஞ்ச்.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
ப்பா.. பிக்பாஸ் ஜூலியா இது.! ஏன் திடீர்னு இப்படியொரு சேஞ்ச்.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழகத்தில் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. பின் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஜல்லிக்கட்டில் கிடைத்த பெருமையால் ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் பின்னர் நாளைடைவில் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ஜூலி ரசிகர்களால் வெறுக்கப்பட்டு விமர்சனத்திற்கு ஆளானார்.
பின்னர் அவர் என்ன செய்தாலும் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். ஆனாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக இருந்தார். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தெளிவாக விளையாடி மக்களின் ஆதரவைப் பெற்றார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஜூலி தற்போது புதிய ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஜூலி முடியில் கலர் செய்து வித்தியாசமாக உள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் ஷாக்காகி ஏன் இந்த திடீர் மாற்றம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.