நியூ லுக்குடன் உள்ள கியூட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...
நியூ லுக்குடன் உள்ள கியூட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மாடலிங் துறையை சேர்ந்த சம்யுக்தா. இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
மேலும் சம்யுக்தா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியலில் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்கள் டிவி ஷோக்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்கள் போன்றவற்றை இணையத்தில் வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது நியூ லுக்குடன் உள்ள கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.