அடேங்கப்பா.! எப்படியிருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்க! 10 வருஷத்துல இப்படியொரு வேற லெவல் மாற்றமா? லீக்கான போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!
பிக்பாஸ் ஷிவானியின் சிறுவயது புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைரோஜா என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் சில காலங்களுக்கு முன் அவர் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்த ஷிவானி நாள்தோறும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இந்த நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவர் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தது முதலே அமைதியாக இருந்துவருகிறார். ஆனாலும் தேவையான இடங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தி நேர்மையாக கருத்தை பதிவு செய்தும் வருகிறார். மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் மற்றொரு போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில் ஷிவானி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் தற்போது அவரது சிறுவயது புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.