அப்படியிருந்தாலே ரொம்ப சந்தோஷம்தான்! கடைசி வாரத்தில் மனம் திறந்த ராஜு! ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!!
அப்படியிருந்தாலே ரொம்ப சந்தோஷம்தான்! கடைசி வாரத்தில் மனம் திறந்த ராஜு! ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்பாக சென்ற நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.
அதாவது பாவனி, ராஜு, அமீர், நீரூப், பிரியங்கா ஆகியோரே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து தனது குறும்புதனமான செயலால் ரசிகர்கள் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தவர் ராஜு. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் மனம்திறந்து பேச கோல்டு மைக் டாஸ்க் நடைபெறுகிறது.
அதில் பேசிய ராஜு, மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், சிரித்தாலும் அதில் நமக்கொரு ஜாலி. அதுபோலதான் இந்த வீட்டிலும் இருந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு அண்ணனோ, தம்பியோ நம்ம வீட்டிலும் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என உங்கள் யார் மனதிலாவது இடம்பிடித்திருந்தால் அதுவே எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்தான் என அவர் கூறியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.