பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பாவனியின் குடும்பத்தினர்! என்ன கேட்டுள்ளனர் பார்த்தீங்களா! பரபரப்பு வீடியோ.!
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பாவனியின் குடும்பத்தினர்! என்ன கேட்டுள்ளனர் பார்த்தீங்களா! பரபரப்பு வீடியோ.!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது அக்ஷரா, சிபி, ராஜு, பிரியங்கா, வருண், தாமரை, பாவனி, அமீர், சஞ்சீவ் உள்ளிட்ட போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த, விருப்பமான FREEZE டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த தினங்களில் அக்ஷரா,சிபி, நிரூப் மற்றும் ராஜுவின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பாவனியின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் பாவனியிடம் அவரது காதலை குறித்து கேட்டுள்ளனர்.
இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்றும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.