இந்த மனசு யாருக்கு வரும்.. சஞ்சீவின் குழந்தைக்காக ராஜு செய்த தியாகம்! நெகிழ வைத்த வீடியோ!!
இந்த மனசு யாருக்கு வரும்.. சஞ்சீவின் குழந்தைக்காக ராஜு செய்த தியாகம்! நெகிழ வைத்த வீடியோ!!
பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இதில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கால் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் தொடக்கத்தில் போட்டியாளர்கள் அனைவரையும் பிக்பாஸ் நாமினேட் செய்துள்ளார்.
இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் பயங்கரமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனை போட்டியாளர்கள் வெறித்தனமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய நாளுக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் முந்தைய போட்டிகளில் வெற்றி அடையாமல் இருக்கும் மற்றவர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கபட்டுள்ளது. இதில் அபினய் மற்றும் பிரியங்கா, ராஜு மற்றும் சஞ்சிவ், வருண் மற்றும் அக்ஷரா, அமீர் மற்றும் பாவனிஆகியோர் ஜோடியாக பிரிக்கபட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர்களின் புகைப்படத்தை காண்பிக்க வேண்டும். அப்பொழுது ஜோடி சேர்ந்த இருவரும் ஒரே புகைப்படத்தை காட்ட வேண்டும்.
இந்த நிலையில் ராஜு சஞ்சீவ் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தியாகம் செய்து, அவரை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் சஞ்சீவ் கண்ணீருடன் ராஜுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் அருமை எனக்கூறி ராஜுவை பாராட்டி வருகின்றனர்.