பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யுகேந்திரன் போட்ட முதல் பதிவு.! என்ன இப்படி சொல்லிட்டாரே!!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யுகேந்திரன் போட்ட முதல் பதிவு.! என்ன இப்படி சொல்லிட்டாரே!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கி, ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளால் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனிலும் கடந்த சீசன்களைப் போலவே சண்டை, சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே அனன்யா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது எனக்கூறி தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து விஜய் வர்மா மற்றும் கடந்த வாரம் யுகேந்திரன், வினுஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனர். அதுமட்டுமின்றி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, பிராவோ, கானா பாலா, அன்னபாரதி ஆகியோர் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகர் யுகேந்திரன் வெளியிட்ட முதல் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் "முடிந்தவரை முயற்சி செய்வோம். முடிவுகளை ஏற்றுக் கொள்வோம்" என பதிவிட்டுள்ளார். ஆனால் யுகேந்திரனின் எலிமினேஷனை ஏற்றுகொள்ள முடியாது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.