வீடியோ பார்த்ததும் சத்தமா சிரிக்கனும்..! வாத்தி கம்மிங் பாடலுக்கு மரணகுத்து குத்திய ஆர்த்தி..! வைரல் வீடியோ..!
Bigg boss fame arthi vaaththi coming dance video
கடந்த 2004 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான கிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் நடிகை ஆர்த்தி. அதன்பிறகு பல்வேறு படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.
தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டாரா என்றால் இல்லை. தனது திறமையை காட்டி மக்களின் மனதை கவர்வதற்கு பதிலாக ஜூலியை குறைகூறியே மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார்.
இதனால் போட்டியின் பாதியிலையே வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஆர்த்தி அவர் கணவருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.