சேரனை ஜெராக்ஸ் எடுத்து போலவே இருக்கும் லாஷ்லியாவின் தந்தை! பிக்பாஸ் வீட்டிற்கு வருகை.
Bigg boss lashliya father photos
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 100 நாள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்டனர். தற்போது 8 பேர் மட்டுமே மீதம் உள்ள நிலையில் போட்டி 80 நாட்களை கடந்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் சீசன் மூன்று பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் லாஷ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எண்ணற்ற ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். மேலும், இயக்குனர் சேரன் பார்ப்பதற்கு தனது நிஜ அப்பாவை போலவே இருப்பதாக கூறி அவருடன் தந்தை மகள் உறவில் இருந்தார்.
மேலும் தனது தந்தையை பார்த்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது எனவும் லாஷ்லியா கூறியிருந்தார். இந்நிலையில் போட்டியாளர்களின் உறவினர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்துவரும் நம்ம பிக்பாஸ் இன்று லாஷ்லியாவின் நிஜ தந்தையை வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளார்.
உண்மைலயே லாஷ்லியாவின் தந்தை சேரன்போலத்தான் இருப்பாரா என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் இன்று அனைவர்க்கும் காட்சியளித்து அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளார் லாஷ்லியாவின் தந்தை.