லாஷ்லியாவின் தந்தையை பார்த்து உறவினர் கேட்ட அந்த ஒரு கேள்வி! ஒட்டுமொத்த கோவத்துக்கும் அதுதான் காரணமா?
Bigg boss lashliya relative question to lashliya father
பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் லாஷ்லியவை பார்க்க அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர். இன்றைய நாள் முழுவதும் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக இருந்தது லாஷ்லியாவின் தந்தை லாஷ்லியா மீது கோவமாக இருப்பதுபோலவும், அவர் லாஷ்லியாவிடம் பேசும் வார்த்தைகளும்தான்.
ப்ரோமோவாக வெளியான இந்த காட்சி பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி அணைத்து ரசிகர்களையும் இன்றைய நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஷ்லியாவின் அம்மா மற்றும் சகோதரிகள் லாஷ்லியாவிடம் கண்ணீர் சிந்தி புலம்புகின்றனர்.
அதன்பிறகு சர்ப்ரைஸாக வந்த லாஷ்லியாவின் தந்தை தன் மகள் மீது கோவப்பட்டு பேசினாலும், தனது மகள் எப்படி என்று தனக்கு தெரியும் என அவரை சமாதான படுத்துகிறார். மேலும், தான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக நெருங்கிய உறவினர்களிடம் கூறியபோது மகளின் கல்யாணத்திற்காக செல்கிறாயா என அவர்கள் கேட்டுள்னனர்.
கவின் - லாஷ்லியா இடையே இருக்கும் உறவைதான் அவர்கள் அப்படி கேட்டுள்ளனர். இதனால் கோவமடைந்துள்ளார் லாஷ்லியாவின் தந்தை. இன்று அவர் லாஷ்லியாவிடம் தனது கோவத்தை காட்ட உறவினர் கேட்ட அந்த கேள்விதான் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் லாஷ்லியாவின் ரசிகர்கள்.