தற்கொலை முயற்சி செய்த மதுமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? கண் கலங்கிய பிரபல நடிகர்.
Bigg boss madhumitha current status
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் நகைச்சுவை நடிகை மதுமிதா கலந்துகொண்டு நன்றாக விளையாடிவந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட ஒருசில சண்டைகள் காரணமாக தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெற்றிபெறும் தருவாயில் இருந்த மதுமிதா தற்கொலை முயற்சியால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த பிறகு மதுமிதா என்ன செய்கிறார் என ஒருசில செய்திகள் வெளிவந்த நிலையில் மதுமிதாவின் தற்போதைய நிலை குறித்து பிக்பாஸ் சீசன் இரண்டின் போட்டியாளர் நடிகர் டேனியல் கூறியுள்ளார்.
அதில், விஜய் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் மதுமிதா பல விஷயங்களை தன்னிடம் சொல்லவில்லை என்றும், மேலும் கையில் காயத்துடன் அவர் வலியில் துடிப்பதாகவும் டேனியல் கூறியுள்ளார். அவரது கையை பார்த்ததும் தனது கண் கலங்கிவிட்டதாகவும் டேனியல் கூறியுள்ளார்.