அட கருமமே! பிக் பாஸ் ரைசா என்னத்த சாப்புடுறாங்க பாருங்க!
Bigg boss raiza eat Scorpio
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதன் முதல் கட்டமாக தனது சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.
இந்நிலையில் நடிகை ரைசா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ரைசாவின் இந்த உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்துள்ளனர்.