சொதப்பிய பிக் பாஸ் சீசன் 2 , விரைவில் சீசன் 3 ஆரம்பம்! தொகுப்பாளருடன் பேச்சுவார்த்தை!
Bigg boss season three anchor name leaked
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது இது எது, கலக்க போவது யாரு, நீயா நானா, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய் தொலைக்காட்சி ஸ்டார் குழுமத்தின் ஒரு அங்கம் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுக்க அணைத்து மொழிகளிலும் உள்ளது ஸ்டார் தொலைக்காட்சி. இதில், அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் சீசன் ஓன்று, இரண்டு என மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் பிக் பாஸ் ஒளிபரப்பானதுபோல தெலுங்கிலும் ஒளிபரப்பானது. சீசன் ஒன்றை ஜூனியர் NTR தொகுத்து வழங்கினார். சீசன் இரண்டை நடிகர் நாணி தொகுத்து வழங்கினார். சீசன் ஓன்று வெற்றிபெற்ற அளவுக்கு சீசன் இரண்டு வெற்றிபெறவில்லை. அதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்களை நானியால் சமாளிக்க முடியவில்லை.
இந்நிலையில், விரைவில் பிக் பாஸ் சீசன் மூன்று தொண்டங்கப்பட்ட உள்ளதாகவும், சீசன் மூன்றுக்கு மீண்டும் ஜூனியர் NTR ஐ தொகுப்பாளராக நியமிக்க இப்போதே பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் ஒரே நேரத்தில் பிக் பாஸ் தொடங்கப்பட்டதால், தமிழிலும் விரைவில் பிக் பாஸிற்கான அறிவுப்பு வரலாம் என கூறப்படுகிறது.