பிக் பாஸ் சீசன் 3 : வீட்டிற்குள் போகும் முதல் போட்டியாளர் இவர்தான்! யார் தெரியுமா?
Bigg boss season three first contestant name leaked
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு வெற்றியும் பெறுகிறது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ். உலக நாயகன் கமலஹாஷன் கடந்த இரண்டு சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது.
பிக் பாஸ் சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்றாலும், சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அதற்கு காரணம் சீசன் இரண்டில் பங்கேற்ற போட்டியாளர்கள் என்றுகூட கூறலாம். இந்நிலையில் சீசன் 3 தொடங்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள போகும் அந்த நட்சத்திர போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த மதுமிதாதான்.
மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக முன்னணி வார இதழ் தெரிவித்துள்ளது. ஜுன் மாத ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சியை எதிர்ப்பார்க்கலாம். மற்றபடி போட்டியாளர்கள் யார் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.