நான் தான் மிகவும் பிரபலம்.! தனுக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்ட வனிதா! பிக்பாஸ் புது ப்ரோமோ!
Bigg boss season three promo day 68
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றுடன் 68 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் மூன்று படத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
இயக்குனர் சேரன், லாஷ்லியா, தர்ஷன் இவர்களில் ஒருவர் வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் மிகவும் பிரபலம் என தெரிவித்து வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறுகிறார்.
அதில் தான்தான் மிகவும் பிரபலம் என கூறி தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொள்கிறார் நடிகை வனிதா. அடுத்ததாக இரண்டாவது பிரபலமாக சேரனையும், மூன்றாவது பிரபலமாக லாஷ்லியாவையும் தேர்வு செய்த அவர் முகினை கடைசியாக 8 வது இடத்தில் வைத்துள்ளார்.