இதுதான் பிக்பாஸ் ஒப்பந்தமா? போட்டியாளர்களின் சம்பளம் குறித்து ரகசியத்தை உடைத்த சாக்க்ஷி!
Bigg boss shakshi reveled bigg boss deal
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் போட்டியில் மீதம் உள்ளனர். கடந்த வாரம் நடிகை கஸ்த்தூரி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் விஜய் டிவி நபர்களிடம் தனக்கு வரவேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டதாகவும், தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் விஜய் டிவி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவரான ஷாக்க்ஷி இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறுகையில் பிக்பாஸ் ஒப்பந்தப்படி 100 நாட்கள் கழித்துதான் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் மதுமிதா தனது சம்பள விஷயத்தில் அவசர படுவது தவறு என கூறியுள்ளார்.