அம்மா..! யாரு தப்பா சொன்னாலும் அத நம்பிடாதீங்கம்மா..! அம்மாவுக்கு ஷிவானி உருக்கமான கடிதம்..
தன்னைப்பற்றி வரும் தவறான தகவல்கள், வதந்திகளை நம்பவேண்டாம் என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானி தனது தாயாருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
தன்னைப்பற்றி வரும் தவறான தகவல்கள், வதந்திகளை நம்பவேண்டாம் என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானி தனது தாயாருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடிகை ரேக்கா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் 15 போட்டியாளர்களில் 9 பேரின் பெயர்கள் இடம்பெற்றது.
இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தநிலையில் இந்த வாரம் தீபாவளி என்பதால் எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்ததை அடுத்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.
இதனை அடுத்து தீபாவளியை முன்னிட்டு தாங்கள் அதிகம் மிஸ் செய்யும் நபருக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு போட்டியாளர்கள் அனைவர்க்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் மிஸ் செய்யும் நபர்களுக்கு கடிதம் எழுதினர். இதனை அடுத்து ஒவொருவராக தாங்கள் எழுதிய கடிதத்தை படித்து காண்பிக்குமாறு பிக்பாஸ் கூறினார்.
அதன்படி சம்யுக்தா அவர் மகன் ரேயனுக்கும், அர்ச்சனா அவருடைய மகளுக்கும், பாலாஜி, ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் தங்களது அம்மாவுக்கும், ஜித்தன் ரமேஷ், ஆரி ஆகியோர் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் கடிதம் எழுதினர். சோம் தனது நாய்க்குட்டிக்கு கடிதம் எழுதியிருந்தநிலையில் அந்த கடிதத்தை படித்ததும் வீடே கலகலப்பானது.
இந்நிலையில் நடிகை ஷிவானி எழுதிய கடிதம் குறித்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவிட்டாலும், அன்சீன் வீடியோவில் தற்போது அந்த காட்சி வெளியாகியுள்ளது. அவர் எழுதிய கடிதத்தில், என்னை பற்றி ஏதாவது நெகட்டிவ் கமெண்ட் வந்தாலோ அல்லது யாராவது தவறாக பேசினாலோ தயவுசெய்து நம்ப வேண்டாம்" என தனது அம்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ட்ராக் ஓடும்நிலையில், இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே காதல் டிராக் ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது. இதனை வைத்துதான் ஷிவானி தனது அம்மாவிற்கு அப்படி கடிதம் எழுதினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.