பிக்பாஸ் புகழ் சுஜாவின் குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம்.!
Bigg boss suja varunee baby photo
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகள் ஒருவர் சுஜாவருணி. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் சுஜா. பெரும்பலம் படங்களில் வரும் பாடலுக்கு நடனம் ஆட்டும் இவர் தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தியும் நடித்துள்ளார்.
இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் திலகம் சிவாஜியின் மகனுமான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவருக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜா. மேலும் நன்றி லாக்டவுன் இந்த பிரச்சினைகள் சீக்கிரம் சரியாகும் என்று நினைக்கிறேன். அதுவரை வீட்டிலேயே இருங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.