தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அர்னவ் போல அள்ளிவிட்ட தர்ஷா குப்தா; வன்மத்தை கக்கி காட்டம்.. சாந்தப்படுத்திய விஜய் சேதுபதி.!

அர்னவ் போல அள்ளிவிட்ட தர்ஷா குப்தா; வன்மத்தை கக்கி காட்டம்.. சாந்தப்படுத்திய விஜய் சேதுபதி.!

Bigg Boss Tamil Season 8 Dharsha Gupta Eliminated Anger Speech  Advertisement


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் நேற்றுடன் மூன்றாவது வாரம் நிறைவடைந்தது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவதில் அர்னவ், மூன்றாவதில் தர்ஷா என இவர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அர்னவ், ஆண்கள் அணியை மேடை வரம்பை மீறி விமர்சித்து வெளியேறினார். அவரை விஜய் சேதுபதி கண்டித்து அனுப்பி வைத்தார். 

தர்ஷா குப்தா வெளியேற்றம்:
இதனிடையே, நேற்று வெளியேறிய தர்ஷா குப்தாவும், பெண்கள் அணியில் குழு போன்று ஆட்கள் சேர்ந்துகொண்டு பிறரை ஒதுக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். அவர் என்னை வெளியேற்றிய போட்டியாளர்கள் வெளியேறுவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார். 

வன்மத்தை கக்கிச் சென்றார்

இவரின் பேச்சு அப்பட்டமாக அர்னவை போலவே இருந்ததாகவும், அர்னவ் கோபத்தில் கத்திவிட்டு சென்றாலும், இவர் வன்மத்தில் கக்கிவிட்டு செல்வதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் இவ்வாறான விஷயங்கள் என்பது எதிர்மறை தோற்றத்தையே வழிவகை செய்யும் என்பதால், மேடை நாகரீகத்தை போட்டியாளர்கள் இழந்து வருகின்றனர். இதனாலேயே அவர்கள் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மிகப்பெரிய தவறு செய்த அர்னவ்?; கண்டித்து அனுப்பி வைத்த விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்.!

குரூப்பிஸம் இருப்பதாக கூறும் அவரும், 3 பேர் கொண்ட விழாக்கமிட்டியில் முக்கியமானவராக இருந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தர்ஷா குப்தா பெண் போட்டியாளர்களை வறுத்தெடுத்தபோது, ஆண்கள் அணியின் ரியாக்சன்

தர்ஷாவுக்கு ப்ரீ பாஸ் கொடுக்க வேண்டாம் என சாச்சனா பேசிவிட்டு, பின் தர்ஷாவிடம் மழுப்பிய சம்பவம்

அர்னவ் போல பெண்கள் அணியில் விழாக் குழு தொடர்பான பேச்சு

இதையும் படிங்க: பாயசம் எங்கடா?.. சவுண்ட் காட்டிய வேலை; கடுப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Dharsha Gupta #Bigg Boss Tamil Season 8 #Dharsha Gupta Speech
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story