சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!
சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, 56வது நாளில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் 40 நாட்களே போட்டியின் வெற்றியாளரை தேர்வு செய்ய எஞ்சியிருப்பதால், போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளளது. கடந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. அப்போது பல சர்ச்சை விஷயங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், பவித்ரா பொம்மை டாஸ்கில் நடந்துகொண்ட விதம் தொடர்பாக தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ஞாயிற்றுக்கிழமையான இன்று கண்டித்து இருக்கிறார். மேலும், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்டுத்தியது போன்ற காட்சியும் வெளியாகி இருக்கிறது.
பிரியாணி கேங்கை கண்டிக்காதது ஏன்?
முன்னதாக, சாச்சனா, அருண், அன்ஷிதா, தர்ஷிகா, ஆனந்தி, விஷால் ஆகியோர் திருட்டுத்தனமாக நள்ளிரவில் பிரியாணி சமைத்து சாப்பிட்டு குழுவாக இணைந்துவிட்ட நிலையில், இதனை விஜய் சேதுபதி கேட்கவில்லை. அதற்கு காரணம் விஜய் சேதுபதியின் நன்மதிப்பை பெற்ற சாச்சனா, அக்குழுவில் இடம்பெற்றது காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ரோஷம் இருக்கா? எங்க வீட்டு உப்பையும் சேர்த்து தின்னுங்க" - தர்ஷிகா கிளப்பிய புயல்.. கடுப்பில் அந்த 2 போட்டியாளர்கள்.!
இந்த விசயத்திற்கு கேள்வி கேட்க முடியாமல், எதற்காக பவித்ராவை கண்டிக்கிறீர்கள் எனவும், VJS க்கு கோவம்லாம் வரும் போலயே, ஆனா மிட்நைட் பிரியாணி கேங் கிட்ட மட்டும் எதுவும் கேக்காமல் காமெடி பண்ணிட்டு விட்டுறுவாரு எனவும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி இவர்கள்தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!