பிகில் படத்தின் கிளைமேக்ஸ் பற்றி ஒபனாக கூறிய பிரபலம்! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்
Bigil climax seen
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை வெளியாகி பல கோடி பார்வையாளர்களை கடந்தது. மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இப்படி தான் உள்ளது என வெளிப்படையாக கூறியுள்ளார் எடிட்டர் ரூபன். அதாவது இதன் கிளைமேக்ஸ் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். கால் பந்து விளையாட்டின் பைனல் தான் கிளைமேக்ஸ்.
அதாவது விளையாடுபவர்களை விட அதை பார்ப்பவர்களுக்கு தான் அதிக பதற்றம் இருக்கும். அதுபோல தான் இதிலும் அமைந்துள்ளது. மேலும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக அமையும் என கூறியுள்ளார்.