நாங்கள் 21 வருடம் கற்றுகொண்டதை 3 மணி நேரத்தில் செய்து அசத்திய தளபதி விஜய் - பிகில் படம் பற்றிய வெளியான புதிய தகவல்.
Bigil new update
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைத்து பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது படத்தில் புட் பால் போட்டியாளராக நடித்த குழுவினர் நடிகர் விஜய் பற்றி புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது நாங்கள் 21 வருடமாக கற்றுக்கொண்டதை அவர் 2-3 மணி நேர முயற்சியில் செய்து காட்டினார் என வியந்து கூறியுள்ளனர்.