சிவகார்த்திகேயன் சொன்னதை அப்படியே காப்பி அடித்த அட்லீ! வீடியோவை வெளியிட்டு வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.
Bigil vijay atlee
இயக்குனர் அட்லீ நடிகர் விஜயை வைத்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இவர் இதற்கு முன்பு தெறி, மெர்சல் என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.
அதேபோல் தற்போது வெளியான பிகில் படமும் மாஸாக இருப்பதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் நிலவியது. மேலும் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை திருவிழா போல கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிகில் விஜய் பேசும் ஒரு வசனம் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் என ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இயக்குனர் அட்லீ என்றாலே கதை திருட்டு மற்றும் மற்ற படத்தை காப்பி அடிப்பது என்ற புகார்கள் எழும் நிலையில் தற்போது புதிதாக சிவகார்த்திகேயன் பேசிய வசனமான நாம் வெற்றிக்காக தான் உழைக்கனுமே தவிர மற்றவரை தோற்கடிக்க உழைக்க கூடாது என்று பேசியதை அப்படியே காப்பி அடித்து பிகில் படத்தில் விஜயை பேச வைத்துள்ளார் அட்லீ.