சர்கார் படத்திற்கு விளம்பரம் கிடையாது..! BJP கட்சியின் பிரமுகர் பேட்டி...!
bjp-not-opened-sarkar
தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதியின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இசைவெளியீட்டு விழாவில் சர்க்கார் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவ்வப்போது அதில் கலந்துகொண்ட நிறையபேர் மேடையில் பேசினார்கள். தளபதி விஜயும் பேசினார். மேலும் தளபதி விஜய் அவர்கள் அரசியல் பற்றி நிறைய பேசினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக BJP கட்சியின் பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், "சர்க்கார் ஒரு ஊசிப்போன படம் என்று நினைக்கிறன்" இம்முறை எங்களால் எந்த வித விளம்பரமும் கிடைக்காது என்றும், மேலும் நாங்கள் அதனை சீண்டகூட மாட்டோம் என மிகவும் ஆக்ரோஷத்துடன் பதிலளித்தார். இது தளபதி விஜய் ரசிகர்களை மிகுந்த கோபபடுத்தியுள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் BJP கட்சியின் பிரமுகர் எஸ்.ஆர்.சேகர்-யை திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்...