தமிழ் நடிகர்களின் 25-வது படமும்; புளூ சட்டை மாறனின் ஒற்றைவரி விமர்சனமும்... கலக்கல் கலாய் இதோ.!
தமிழ் நடிகர்களின் 25-வது படமும்; புளூ சட்டை மாறனின் ஒற்றைவரி விமர்சனமும்... கலக்கல் கலாய் இதோ.!
தமிழ் திரையுலகம் தன்னகத்தே பல திறமையாளர்களை கொண்டுள்ளது. திரையுலகமும், மக்களும் துவண்டுபோகும்போது, எதிர்பாராத மாற்றம் மக்களை விரும்பவைக்கும், வெற்றியும் கிடைக்கும். ஆனால், திரையுலகில் மக்களின் சொற்களுக்கு மதிப்பளித்த நடிகர்கள் உச்சத்தில் இருப்பதும், அவர்களின் மனதை வேதனைப்படுத்தும் பேச்சுக்களை பேசியவர்கள் தூக்கியெறியப்படுவதும் அறியப்படாத மர்மமாக இருந்து வருகிறது.
திரையுலகில் நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்திருக்கலாம். அவர்களின் முதல் படத்தில் தொடங்கி 25, 50, 75, 100வது படங்கள், முக்கியமானதாக கருதப்படும். இதில் சமீபத்தில் நடிகர் கார்த்திக்கின் 25வது திரைப்படமான ஜப்பான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரிலீசான அன்று கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ரிலீஸ் ஆகியது.
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்கு தீபாவளி கொண்டாட்டமாக மக்கள் வெள்ளத்தில் நிறைந்து வருகிறது. ஆனால், ஜப்பான் திரைப்படம் எதிர்பாராத படுதோல்வியை சந்தித்துள்ளது. மக்களின் வரவேற்பின்மையால், ஒரு திரையரங்கில் இரண்டு காட்சிகளை பிரித்து பதிவிட்ட உரிமையாளர்கள், ஜிகர்தண்டா படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
ஜப்பான் படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் நடிகர் கார்த்திக் பேசிய பல வசனங்கள் நெட்டிசன்களிடையே வறுத்தெடுக்கப்ட்டு வந்த நிலையில், படம் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், நடிகர்களின் 25வது படமும், அதன் வெற்றி-தோல்வி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் அமர்க்களம் (1999), விஜயின் கண்ணுக்குள் நிலவு (2000), சிம்புவின் சிலம்பாட்டம் (2008), சூர்யாவின் சிங்கம் (2010), தனுஷின் விஐபி (2014), ஆர்யாவின் விஎஸ்ஓபி (2015), விஜய் சேதுபதியின் சீதக்காதி (2018), விஷாலின் சண்டக்கோழி 2 (2018), ஜெயம் ரவியின் பூமி (2021), கார்த்திக்கின் ஜப்பான் (2023) ஆகிய படங்கள் தொகுக்கப்பட்டன.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் பதிவை தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மாறன், அஜித்தின் அமர்க்களம் படத்திற்கு சூப்பர் ஹிட், விஜயின் கண்ணுக்குள் நிலவு படத்திற்கு சூப்பர் பிளாப், சிம்புவின் சிலம்பாட்டம் படத்திற்கு அட்டர் பிளாப், சூர்யாவின் சிங்கம் படத்திற்கு மெகா ஹிட், தனுஷின் விஐபி படத்திற்கு பிளாக்பஸ்டர், ஆர்யாவின் விஎஸ்ஓபி படத்திற்கு மரண பிளாப், விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு சுப்ரீம் பிளாப், விஷாலின் சண்டக்கோழி 2 படத்திற்கு மெகா பிளாப், ஜெயம் ரவியின் பூமி படத்திற்கு மோசமான ஓடிடி பிளாப், கார்த்திக்கின் ஜப்பான் படத்திற்கு பேரழிவு தோல்வி என கூறியுள்ளார்.